களஞ்சியப் பகுதி 25

அஞ்சல் மனை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[பொன் மூட்டையுடன் சுமதி நுழைகிறாள்] வேதாளம் : அடே நாய்க்குட்டிப் பயலே, வெளியிலே என்னடா வேலை...போ...உள்ளே!...யாரம்மா நீ என்ன வேண்டும்? சுமதி : ஓ...நீங்களா!...ம். முத்தனை பார்த்தீர்களா? வேதா : நானும் முத்தனுக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறேன். சும : அவரை நான் பார்க்க வேண்டுமே. வேதா : ஊகும். அவனைப் பார்க்கவே முடியாது...அவன் பாசறைச் சிறையில் போட்டுவிட்டார்கள். அவன் விடுவிப்பதாயின் நூறு பொன் வேண்டும்... சும : அதைத்தான் கொண்டு வந்திருக்கிறேன்...இதோ இதை தயவு செய்து அவரிடம் கொடுக்க முடியுமா?... வேதா : கொடுக்க முடியுமாவா?...அதைவிட எனக்கு வேறு வேலை? அன்பான பெண்ணே! நல்லகாரியம் செய்தாய்...முத்தன் சார்பாக உனக்கு என் நன்றி...இதோ இப்போதே போய் அவனை மீட்கிறேன்... [போகிறான்]