களஞ்சியப் பகுதி 3
பூங்காவனம் அறை
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
★ [பூங்காவனம் முத்தனுக்காக பழங்களை எடுத்துக் கொண்டிருக்கிறாள்.] பல : பூங்காவனம்-பூங்காவனம்....... பூங் ; என்ன அண்ணா...என்ன விசேஷம்....... பல : விசேஷமா! உனக்கு அண்ணனைப் பிறந்து விட்டு, விசேஷம் வேறு எனக்கு. இதோ பார் வேங்கை நாட்டரசன் ஓலையனுப்பி இருக்கிறான்...... பூங் : எப்போதும் போல என் திருமணத்தைப் பற்றித்தானே...... பல : திருமணமா? அதைத்தான் அவன் மறந்து விட்டானே...இப்போது வந்திருக்கும் ஓலை...அரை லட்சம் பொன்னுக்கு...அவசர உத்திரவு. கப்பம் கட்டித்தீர வேண்டும் பூங்காவனம்...கப்பம் கட்டித் தீரவேண்டும்... பூங் : வழக்கம் தானே அண்ணா இது!... பல : வழக்கமா? பூங்காவனம் யோசித்துப்பார்....நீ அந்த வேங்கைபுரத்தாரை விவாகம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டிருந்தால் இந்த பதினைந்து வருட காலமாக எத்தனை லட்சம் பொன் மீதமாயிருக்கும்—கொட்டிக் கொட்டி அழுதிருக்கிறேனே அந்த கொடுமையாளர் ஆட்சி பீடத்துக்கு...... பூங் : அதற்காக...என் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள முடியுமா?...... பல : அபிப்பிராயம், பெரிய அபிப்பிராயம்!....பல வருஷ காலமாக உன்னைத் திருமணம் செய்து கொள்ள முயற்சித்து கடைசியில் பிரமச்சரிய விரதம் பூண்டிருக்கிறான்....வேங்கை நகர் மன்னன்...நீயோ அவனை வெறுக்கிறாய்...... பூங் : அண்ண...திருமணப் பேச்சு பேச வேண்டிய நேரமோ, பருவமோ இல்ல ைஎனக்கு...தயவு செய்து என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்...அந்தப் பாழும் கல்யாணப் பேச்சு வேண்டாம்! வேண்டவே வேண்டாம். பல : இப்படி அழுது அழுது தான் பழுதாரையே பாழ்படுத்திவிட்டாய் நீ...உன்னோடு பேசி என்ன பயன் எனக்கு......